உத்தரப் பிரதேசத்தின் அம்பேதக்நகர் (Ambedkar Nagar) மாவட்டத்தில், ஓர் ஆச்சரியமானச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 5 குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், தனது 18 வயதுப் காதலனை திருமணம் செய்து கொண்டார். இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண்ணின் முதல் கணவரே இந்தத் திருமணத்தை முன்னின்று நடத்திக் கொடுத்துள்ளார்.

தேவரியாவில் (Deoria) பழைய இரும்புக் கடை வைத்திருக்கும் நிகில் என்பவருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஒரு நாள், அந்தப் பெண் தனதுக் காதலனுடன் அங்கிருந்துத் தப்பித்து அம்பேதக்நகர் வந்துள்ளார்.

மனைவி காதலனுடன் சென்றதைக் கேள்விப்பட்டுக் கணவரும் அங்கு வந்துள்ளார். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும், மனைவி தனதுக் காதலனுடன் வாழப் பிடிவாதமாக இருந்ததால், கணவர் புதன்கிழமை அன்று ராம் நகரில் உள்ள சிவன் கோவிலில் தனது மனைவிக்கும், அவரதுக் காதலனுக்கும் திருமணம் செய்து வைத்தார்.

திருமணத்திற்குப் பிறகு, கணவர் தனது ஐந்து குழந்தைகளையும் அழைத்துக்கொண்டுத் தனது வீட்டிற்குத் திரும்பினார். இந்தக் காதல் திருமணச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பேசுபொருளாகி உள்ளது.