ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று மாலை இந்தியா வந்து சேர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். டெல்லி விமான நிலையத்தில் அதிபர் புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, அதிபர் புதினை வரவேற்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பெண்கள் அவருக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு அளித்தனர். அவர்கள் புதினின் புகைப்படத்தை வைத்து ஆரத்தி எடுத்து, இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு பாடல்கள் பாடி பேரணியாகச் சென்றனர்.
<a href=”http://
Last time, Trump was worshipped. He’s handing out tariff prasad. Now imagine what kind of prasad the Russians might serve us 🤡#PutinInIndia pic.twitter.com/0JvuYzRFnw
— The Jai Bhim Chronicles (@JaiBhimChron) December 4, 2025
“>
பிரதமர் மோடியுடன் புதின் கைகுலுக்கும் படங்களை ஏந்தி, அவரது இந்திய வருகைக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர்.
