தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனரான இமயம் பாரதிராஜா இன்று உடல்நல குறைவினால் காலமானார். அவருக்கு வயது 84. கடந்த 1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா தமிழ் சினிமாவில் மண்வாசனையை புகுத்தியவர்.
கிராமத்து கதைகள் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்த பாரதிராஜா தன் மகனின் மரணத்திற்கு பிறகு மிகுந்த வேதனை அடைந்த நிலையில் தற்போது அவர் மரணம் அடைந்து விட்டார். அவரது மரணத்திற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் முதல் ஆளாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் இந்த நிலையில் தற்போது பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்
