தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனரான இமயம் பாரதிராஜா இன்று உடல்நல குறைவினால் காலமானார். அவருக்கு வயது 84. கடந்த 1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா தமிழ் சினிமாவில் மண்வாசனையை புகுத்தியவர்.

கிராமத்து கதைகள் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்த பாரதிராஜா தன் மகனின் மரணத்திற்கு பிறகு மிகுந்த வேதனை அடைந்த நிலையில் தற்போது அவர் மரணம் அடைந்து விட்டார். அவரது மரணத்திற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் முதல் ஆளாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்திற்கு நடந்து சென்று முதலமைச்சர் விஜய் பாரதிராஜா உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில் மிகவும் கண் கலங்கினார்.

 

அப்போது நடிகை ராதிகா ஒரு சேரில் உடைந்து போன படி கண்ணீரோடு அமர்ந்திருந்தார். முதல்வர் விஜய் ராதிகாவை அணைத்து ஆறுதல் கூறிய நிலையில் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். மேலும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், சீமான், நடிகர்கள் சூர்யா, சிவகுமார் உள்ளிட்ட பலரும் தற்போது நேரில் சென்று பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.