தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தான் ஆதரவு அளிக்கத் தொடங்கியதில் இருந்து, சினிமா திரையுலகில் தனக்குப் பல முட்டுக்கட்டைகளும் பிரச்சினைகளும் வந்ததாக நடிகர் ஜெய் அதிரடியான உண்மைகளை உடைத்துள்ளார். தான் ஏற்கனவே அக்ரிமெண்ட் செய்து கமிட்டாகியிருந்த படங்கள் கூட, விஜய் அவர்களுக்குச் சப்போர்ட் செய்த ஒரே காரணத்திற்காகத் திடீரென கேன்சல் செய்யப்பட்டதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக மாபெரும் வெற்றி பெற்ற பிறகு, கேன்சல் செய்யப்பட்ட அதே படங்கள் அனைத்தும் மீண்டும் தன்னிடமே தேடி வந்ததாகக் கூறி கோலிவுட்டின் மறுபக்கத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளார்.முதலமைச்சர் விஜய் மீது தான் அளவுகடந்த அன்பு வைத்திருக்க இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளதாக ஜெய் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தான் இன்று இந்த இடத்தில் இருப்பதற்கும், ஒரு நடிகராக உருவெடுத்ததற்கும் முதல் அடித்தளமிட்டவர் விஜய் அவர்கள் தான் என்றும், அந்த நன்றி உணர்வு தனக்கு எப்போதும் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
TVK-க்கு Support பண்ணதுல இருந்து எனக்கு நிறைய Problem வந்துச்சு… நிறைய படம் Cancel ஆயிடுச்சு 😥#cmvijay #jai #vijay #tvk #IndiaglitzTamil pic.twitter.com/Q8tU5bFd7i
— IndiaGlitz – Tamil (@igtamil) May 15, 2026
இரண்டாவது, தனிப்பட்ட முறையில் அவர் மீது தனக்கு இருக்கும் உண்மையான அன்பு தான் எனக் குறிப்பிட்ட அவர், ஏதோ அரசியலுக்காக விஜய் இதையெல்லாம் செய்யவில்லை என்றும், கடந்த 2005-ஆம் ஆண்டிலிருந்தே மக்களுக்கு அவர் பல நன்மைகளைச் செய்து வருகிறார் என்றும் நடிகர் ஜெய் பேசியுள்ள இந்த உருக்கமான வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
