அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கிராமப்புற ஏழை எளிய மக்களின் மிக முக்கியமான, ஆனால் வெளியில் சொல்ல முடியாத ஒரு பெரிய துயரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவமனைக் கழிவறைகளில் வெஸ்டர்ன் டாய்லெட் (Western Toilet) மட்டுமே இருப்பதால், கிராமங்களில் இருந்து வரும் முதியவர்களுக்கும் ஏழை மக்களுக்கும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியாமல் தினந்தோறும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நடைமுறைச் சிக்கல் குறித்துப் பொதுமக்கள் தவெக MLA ரமேஷிடம் தங்களது குமுறல்களை நேரில் கொட்டித் தீர்த்துள்ளனர்.
மக்களின் குரலுக்கு செவிசாய்த்து… திருவரங்கம் அரசு மருத்துவமனையில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்ட திருவரங்கம் எம்எல்ஏ @RameshOffcl அவர்கள்.
மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி களத்தில் இறங்கி செயல்படும் எம்எல்ஏ அவர்களுக்கு பாராட்டுகள். 👏 pic.twitter.com/ThQUri7hq6
— RamKumarr (@ramk8060) May 15, 2026
மக்களின் இந்த நியாயமான ஆதங்கத்தை உன்னிப்பாகக் கேட்டறிந்த MLA ரமேஷ், இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஸ்பாட்டிலேயே அதிரடி உறுதி அளித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள இந்த வசதிக் குறைபாடுகள் மற்றும் கழிவறைப் பிரச்சினைகளை உடனடியாக நம்முடைய அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அங்குள்ள வெஸ்டர்ன் டாய்லெட்டுகளுக்குப் பதிலாக நம் மக்களுக்குப் பழகிய இந்தியன் டாய்லெட்டுகளை (Indian Toilet) மாற்றி அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
