பீகார் மாநிலம் ஷாபூர் படோரி ரயில் நிலையத்தில் நெஞ்சை உலுக்கும் ஒரு பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது. மூன்று பெண்கள், இரண்டு குழந்தைகளுடன் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தத் தண்டவாளத்தில் அதிவேகமாக ஒரு ரயில் வந்துவிட்டது. தப்பிக்க வழியில்லாததால், அந்தப் பெண்கள் குழந்தைகளைத் தங்களது உடலுக்குக் கீழே வச்சு, தண்டவாளத்தின் ஓரமாக அப்படியே அமர்ந்து கொண்டனர்.
அதிவேகமாக ரயில் அவர்கள் மேல் கடந்து சென்ற அந்த சில நொடிகள், மரண பயத்தின் உச்சக்கட்டம்! ரயில் சென்ற வேகத்தில் ஒரு பெண்ணுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், தனது உயிரைப் பணையம் வைத்து, அந்தத் தாய் இரண்டு குழந்தைகளின் உயிரையும், தன் கூட வந்த மற்ற இரண்டு பெண்களின் உயிரையும் பத்திரமாகக் காப்பாற்றியுள்ளார். இந்த நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, அந்தத் தாயின் தைரியத்தைப் பாராட்டியும், ரயிலில் இப்படி ஆபத்தான முறையில் கடக்கக் கூடாது என்று எச்சரித்தும் வைரலாகி வருகிறது.
