தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் இன்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். அவரின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று நள்ளிரவு 12 மணிக்கு படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே லியோ திரைப்படத்தில் நடித்துள்ளது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சுத்தியல் கொண்டு ரத்தம் தெறிக்க கழுதைப்புலிகளின் பற்களை உடை தெரிவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.