நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவருக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய்க்கு தன்னுடைய வாழ்த்துக்களை கூறிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற எங்களது கட்சி பெயரின் ஆங்கில சுருக்கம் TVK ஆகும்.

நடிகர் விஜயின் கட்சிக்கும் அதுவே தான் ஆங்கில சுருக்கமாக உள்ளது. தேர்தல் ஆணையத்தில் அவர்கள் பதிவு செய்து விட்டதாக கூறுகிறார்கள். இரண்டு கட்சிக்கும் ஒரே பெயர் என்பது சாத்தியமில்லை. எனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நாங்கள் மனு அளிப்போம் என்று கூறியுள்ளார்.