தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இதுவரை எந்தப் பெரிய கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் அமைதி காத்து வருகிறது. இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தவெக-வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தவெக தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைக்குமா என்பது குறித்து கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் விரைவில் தெளிவான பதிலை அளிப்பார்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவெக-வின் பொதுக்குழு கூட்டம் எப்போது நடக்கும்? அதில் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதுதான் இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக். ஏற்கனவே தேர்தல் ஆணையம் தவெக-விற்கு “விசில்” சின்னத்தை ஒதுக்கியுள்ள நிலையில், கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கூட்டணி குறித்த சஸ்பென்ஸ் இன்னும் நீடிப்பதால், அரசியல் கட்சிகளும் தொண்டர்களும் அந்தப் பொதுக்குழு கூட்டத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்!
