தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கமாக இருந்த தமிழர் தேசம் கட்சி, இன்று கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் செல்வக்குமார் அவர்கள், “எங்கள் கட்சியின் கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாலும், உரிய மரியாதை அளிக்காததாலும் இந்தக் கடினமான முடிவை எடுத்துள்ளோம்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து விலகியது மட்டுமன்றி, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்குத் தங்கள் ஆதரவை வழங்கப்போவதாகவும் அறிவித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்!
தேர்தல் தேதி நெருங்கும் வேளையில், சிறு சிறு கட்சிகளும் தங்களது நிலப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழர் தேசம் கட்சியின் இந்தத் திடீர் முடிவு பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஒரு பின்னடைவாகவும், திமுகவிற்கு ஒரு கூடுதல் பலமாகவும் பார்க்கப்படுகிறது. தொகுதிப் பங்கீடு, கூட்டணிப் பேச்சுவார்த்தை என அனல் பறக்கும் இந்தச் சூழலில், “அராஜகமான அரசு” என எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், தமிழர் தேசம் கட்சி திமுகவை ஆதரிக்க முன்வந்தது அரசியல் கணக்குகளை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது
