2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) “விசில்” சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தவெக தரப்பில் ஆட்டோ, மோதிரம், வெற்றிக் கோப்பை மற்றும் விசில் ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்குமாறு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதில், அனைவராலும் எளிதில் அடையாளம் காணக்கூடிய “விசில்” சின்னம் தற்போது விஜய்க்கு கிடைத்துள்ளது. இது தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது!

​இதேவேளையில், உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (MNM) கட்சிக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த தேர்தல்களில் அக்கட்சி பயன்படுத்திய “டார்ச் லைட்” சின்னமே இந்த முறையும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனது அடையாளத்தை மாற்றாமல் கமல் களம் காணப்போகிறார் என்பது உறுதியாகியுள்ளது.