மோடி வாஷிங் மெஷின் ஒன்றை வாங்கியுள்ளார், அது மேட் பை பாஜக. அந்த வாஷிங்மெஷினில் உள்ளே சென்றால் ஊழல்வாதிகள் தூய்மையாகின்றனர் என்று சிதம்பரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். முன்னதாக வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்த 27 முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீது இருந்த ஊழல் வழக்குகள் அனைத்தையும் பாஜக நிறுத்தி வைத்துள்ளது என்று எதிர்க்கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.