தற்போது தமிழ்நாட்டிற்கே வழி காட்டக் கூடிய வகையில் 69 சதவீதம் விழுக்காடு இட ஒதுக்கீடு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கம்தான் என்று சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். மேலும், இட ஒதுக்கீடு முறையில் நாம் பிள்ளைகள் வேலைக்கு வருவதை பார்த்தாலே பாஜகவினர் கதறுகிறார்கள். மேலும் ஏரியுதுடி மாலா ஃபேனை போடு என்பது போல் கதறுகிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் பாஜக பாமக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என கூறியுள்ளார்.