தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் இன்று கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிற இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். வார இறுதியில் பயணிக்க இதுவரை 5,303 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.