ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஆவினில் பால், வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் போன்ற பல்வேறு பால் தொடர்பான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற வகையிலும், அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் 3 வகையான (டிலைட், சமன்படுத்தப்பட்ட மற்றும் நிறை கொழுப்பு பால்) பால் வகைகளை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

ஊதா நிற பாக்கெட்டுகளில் 3.5% கொழுப்பும், 8.5% இதர சத்துக்களும், இளஞ்சிவப்பு நிற பால் பாக்கெட்டில் 3.5% கொழுப்பும், 8.5% இதர சத்துக்களும், ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் 6% கொழுப்பும், 9% இதர சத்துக்களும் அடங்கியுள்ளன. இந்த பால் பொருட்கள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.