உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட செயலிகளை போல பயனர்களின் பாதுகாப்புக்காக இமெயில் verify செய்யும்படி புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரே அக்கவுண்டை நான்கெட்டை லாகின் செய்து கொள்ளலாம் என்ற அறிவிக்கப்பட்டது.

பல்வேறு அக்கவுண்ட் ஹேக் செய்யப்படும் நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் இமெயில் வெரிஃபை செய்யும்படி அப்டேட் வழங்கியுள்ளது. இந்த அப்டேட் தற்போதைக்கு whatsapp டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் அனைத்து பயனர்களும் பெற்று பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தெரியாத நபர்கள் whatsapp எண்ணிற்கு கால் செய்யும்போது அதனை mute செய்யும்படியான வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.