உத்தரப் பிரதேசத்தின் அரசு மருத்துவமனை ஒன்றில், “ஏன் இன்னும் பாட்டிலை மாற்றவில்லை?” என்று கேட்ட நோயாளியின் உதவியாளர் மீது, அங்கிருந்த நர்ஸ் குளுக்கோஸ் பாட்டிலை ஆத்திரத்துடன் தூக்கி வீசி எறிந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் நோயாளியைக் கவனிக்க வேண்டிய நர்ஸே, பொறுப்பற்ற முறையில் வன்முறையில் ஈடுபட்டது அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடமையை மறந்து நோயாளியின் உதவியாளரிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட அந்த நர்ஸ் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது, சிகிச்சைக்காக வரும் சாமானிய மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது என பொதுமக்கள் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.