“பீகார் ரயில் எக்ஸ்பிரஸின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில், பயணச்சீட்டு இல்லாத நபர்கள் சிலர் பிடிபடாமல் இருக்க கழிப்பறைக்குள் ஒளிந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பயணிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில், நீண்ட நேரமாகப் பூட்டப்பட்டிருந்த கழிவறை கதவைத் தட்டித் திறந்த போது உள்ளே இரண்டு பேர் அமர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் அங்கிருந்து விலகிச் செல்லுமாறு பயணி கேட்ட போது, “நீங்கள் அதைத் தான் பயன்படுத்த விரும்புகிறீர்களா?” என அவர்கள் அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் ரயிலின் நடைபாதைகளிலும் நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
<a href=”http://
मेरे आरक्षित कोच के शौचालय के अंदर कई अनधिकृत/जनरल यात्री बैठे हुए हैं। शौचालय का उपयोग नहीं हो रहा। उन्हें बाहर निकलने के लिए कहने पर वे अभद्र व्यवहार कर रहे हैं और धमकाने की कोशिश कर रहे हैं। कोच का रास्ता भी बाधित है, जिससे यात्रियों को गंभीर परेशानी हो रही है। कृपया तत्काल… pic.twitter.com/etqC7zSdfD
— Sarfaraz Zain (@SarfarazZain01) June 16, 2026
“>
இக்காணொளி வைரலானதைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளதுடன், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காகப் புகார் விபரங்கள் ரயில்வே மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
