ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில், வங்கிப் பாதுகாப்பு காவலராகப் பணியாற்றி வந்த மதன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், தற்கொலை அல்ல, அது ஒரு திட்டமிட்ட பச்சைக் கொலை என்பதை போலீஸார் கண்டுபிடித்து அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
மதனின் மனைவி பிங்கிக்கும், அவரது அண்ணன் மகனான விஷால் என்ற இளைஞருக்கும் இடையே கடந்த சில காலமாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
குடிப்பழக்கம் கொண்ட மதன், மனைவியைக் கொடுமைப்படுத்தியதோடு, இவர்களின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்துகொண்டு இருவரையும் கண்டித்து அடித்துள்ளார்.
இதனால் தங்களது கள்ள உறவுக்கு முட்டுகட்டையாக இருக்கும் மதனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த கள்ளக்காதல் ஜோடி, கடந்த ஜூன் 7-ஆம் தேதி இரவு ஒரு பயங்கரமான சதியை அரங்கேற்றியுள்ளனர்.
அன்று இரவு மனைவி பிங்கி, கணவன் மதனுக்கு மிகவும் ஆசையாகத் தூக்க மாத்திரை கலந்த பாயசத்தைக் (கீரை) கொடுத்துள்ளார். மதன் மயக்கமடைந்ததும், நள்ளிரவில் மொட்டை மாடி வழியாக வீட்டிற்குள் நுழைந்த காதலன் விஷாலுடன் சேர்ந்து மதனின் கை, கால்களைக் கட்டியுள்ளார்.
பின்னர் அவருக்குப் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடிக்க வைத்து தற்கொலை போல நாடகமாட முயன்றபோது, மதன் திடீரென விழித்துத் தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விஷால், வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் மதனின் தலையில் ஓங்கி அடித்ததோடு, இரண்டு பேரும் சேர்ந்து அவரது கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
மதனின் தாய்க்கு ஏற்பட்ட சந்தேகத்தால் போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில், மனைவியும் மருமகனும் மாட்டிக்கொண்டனர். தற்போது மனைவி பிங்கி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார், காதலன் விஷாலை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
