பத்து திருமணங்கள் செய்து, ராணுவ வீரர்கள் மற்றும் மருத்துவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்த ஒரு ‘கில்லாடி’ பெண்ணைப் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தனது மனைவியின் விபரீத பின்னணியை அறிந்து பயந்துபோன கணவர் ஒருவர், அவரிடமிருந்து தன்னைத் பாதுகாத்துக் கொள்ள காவல்துறைக்கு ஓடி உதவி கோரியுள்ளார். அந்தப் பெண் எப்போதுமே கையில் துப்பாக்கியுடன் உலா வருவதாகவும், தன்னை மிரட்டிப் பணம் பறிக்க முயல்வதாகவும் கணவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனால் பணக்காரப் பின்னணி கொண்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களை மட்டுமே குறிவைத்து, அவர்களைத் தன் வலையில் வீழ்த்தித் திருமணம் செய்துகொள்வதை இப்பெண் வழக்கமாகக் கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு அவர்களை மிரட்டிப் பெரும் தொகையைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்.
இந்நிலையில் இந்த கில்லாடி மனைவியின் தொடர் ஏமாற்று வேலைகளும், துப்பாக்கி கலாச்சாரமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
