தமிழகத்தில் நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் திரையுலகினர் மத்தியில் பெரும் கொண்டாட்டம் நிலவி வரும் வேளையில், அவருக்கு ஆதரவாகப் பேசி வரும் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கடுமையான ட்ரோல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

சமீபத்தில் தவெக ஆட்சி குறித்துப் பேசிய நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ், புதிய மாற்றத்தை விமர்சிப்பவர்களைத் தெரு நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசியது இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, பின்னர் அவரே அதற்கு விளக்கமளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இந்தச் சர்ச்சை சற்று ஓய்ந்த நிலையில், தற்போது விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீமன் அளித்த பேட்டி அடுத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டில் நடக்கும் சில தவறுகளைச் சிலர் பூதாகரமாக்குவதாகவும், பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் இல்லை என்றால் கூட முதலமைச்சரைக் டேக் (Tag) செய்து விமர்சிப்பதாக ஸ்ரீமன் ஆதங்கப்பட்டார்.

இதைக் கேட்டு கொதித்தெழுந்த நெட்டிசன்கள், “மக்களுக்குப் பிரச்சினை என்றால் அதிகாரிகள் மீது நம்பிக்கை வைத்து ஓட்டுப் போடவில்லை, விஜய்யை நம்பித்தான் வாக்களித்தோம்; அதனால் அவரைத் தவிர வேறு யாரைக் கேள்வி கேட்பது?” என லாரன்ஸ் டிஸ்சார்ஜ் ஆன கையோடு, இப்போது ஸ்ரீமனை வறுத்தெடுத்து அட்மிட் ஆக்கி வருகின்றனர்.