உலகம் முழுவதும் தற்போது கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்ஸ்ட்டா புதிய அம்சத்தை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது பின்பற்றாத நபர்களுக்கு நேரடியாக மெசேஜ் அனுப்புவதை தடுக்கின்றது.

ஒருவரை ஒருவர் பின் தொடராதவர்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்பும் முன்பு மெசேஜை ஏற்றுக்கொள்ளும் கோரிக்கை மற்ற நபருக்கு செல்லும். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டால்தான் மெசேஜ் அவர்களை சென்றடையும். பயனர்கள் தங்களின் விருப்பப்படி தனி உரிமை அமைப்புகளை மாற்றுவதற்கான விருப்பமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.