பொதுவாகவே நாம் கூகுள் தளத்தில் search செய்யப்படும் அனைத்து தகவல்களும் திருடப்பட்ட இன்ஸ்டாகிராம் மற்றும் youtube ஆகிய பக்கங்களில் அதற்கு தகுந்தவாறு நமக்கு தகவல்களை வழங்கி வருவதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறு பயனர்களின் விவரங்களை பிற இணைய தளங்களுக்கு அனுப்பாமல் பயனர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் படி கூகுள் நிறுவனம் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி கூகுள் பக்கத்தில் பயனர்களின் முகவரி, மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றை மொத்தமாக நீக்கும்படியான புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் தேடலில் இருந்து பயனர்களின் தகவல்களை அனுப்புவதற்கான கோரிக்கைகளை இதன் அடிப்படையில் சமர்ப்பித்தால் அந்த தகவலை அனுப்பாமல் மொத்தமாக நீக்கும்படியாக சேவைகள் வழங்கப்படும். இதன் மூலம் பயனர்களின் விவரங்களும் பாதுகாப்பாக இருக்கும் என பொது அறிவிப்பு வெளியாகி உள்ளது.