கர்நாடக மாநிலத்தில் உலிகி என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண்  ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு 4 மாத பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் இருக்கிறது. இதில் 4 மாத கைக்குழந்தையை அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் விலைக்கு வாங்கியுள்ளார். இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு தெரிய வரவே குழந்தையை வாங்கிய பெண்ணை சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் அந்த குழந்தையை மீட்டு கொப்பல் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது சாலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. எனவே அந்தப் பெண் மது குடிக்க பணம் இல்லாததால் தன்னுடைய குழந்தையை வெறும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இதேபோன்று அவர் மற்றொரு குழந்தையையும் விற்பனை செய்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இந்த பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். மேலும் இந்த பெண்ணை அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.