போகோ நிறுவனத்தின் M6 PRO 5G  ஸ்மார்ட் போன் இன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட்போனில் வழங்க இருக்கும் பிராசசர் குறித்த விவரங்கள் நிறுவனம் சார்பாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் பிலிப்கார்ட்டில் இதன் விற்பனை நடைபெற உள்ளது. சியான் நிறத்தில் வெளியாக இருக்கும் இந்த M6 PRO 5G ஸ்மார்ட்போனில் எல்இடி பிளாஷ் மற்றும் இரட்டை கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

M6 PRO 5G ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்டுகளில் விற்பனைக்கு தயாராக உள்ளது. அதன்படி 4 ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி 14,999 ரூபாய் என்றும் 4 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி போன் 15,999 என்றும் 6ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி போன் 16,999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.