உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் தினம் தோறும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது மெட்டாவுக்கு சொந்தமான வாட்சப் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஆன்லைன் கால்களுக்கான புதிய inter face அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செயல்பாடு தற்போது பரிசோதனையில் உள்ள நிலையில் இதன் மூலம் உங்களின் whatsapp கணக்குக்கு வரும் அழைப்புகள் இந்த அம்சத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாக ஐகான்கள் உள்ளதால் பயனர்களுக்கு எளிதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை முறை வெற்றி அடைந்த பின்னர் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் எனவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.