உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் வாட்ஸ்அப் நிறுவனம் புது அப்டேட்டை வழங்கி வரும் நிலையில் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இல் உள்ள குழு அரட்டையில் பங்கேற்பாளர்களை புதிய குழுக்களில் சேர்க்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. WABetainfo இன் படி, குழு அரட்டைக்குள் ஒரு புதிய பேனர் தோன்றும். இது குழுவில் புதிய உறுப்பினரை சேர்க்க குழு தகவலை திரை வழியாக திறக்காமல் அவர்களை குழுவிற்குள் சேர்த்து விடலாம்.

குழு அரட்டையில் நேரடியாக பங்கேற்பாளர்களை சேர்க்கும் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் whatsapp பீட்டாவை நிறுவும் சில பயனர்களுக்கும் கிடைக்கின்றது. இனிவரும் நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் whatsapp அரட்டைகளில் வீடியோ செய்தியை உடனடியாக பதிவு செய்து பயிரும் திறனை வாட்சப் நிறுவனம் சேர்ப்பதாக தெரிவித்துள்ளது. 60 வினாடிகளில் நீங்கள் எதை சொல்ல விரும்புகிறீர்களோ அதனை காட்டுவதற்கு வீடியோ செய்திகள் மிக நேர வழி என்று வாட்ஸ் அப் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது வாய்ஸ் அனுப்புவது போன்று வீடியோ அனுப்பவும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.