ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.16,499 விலையில்  அட்டகாசமான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. 2 மெகா பிக்சல் வெப்கேம் வீடியோ கால் சேவையை எளிதாக்குகிறது. கனெக்டிவிடியை பொருத்தளவில் 2 யு.எஸ்.பி. போர்ட்டுகள் உள்ளன. ஒரு மினி HDMI போர்ட், 3.5 mm ஹெட்போன் ஜேக் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அமேசான் இந்தியாவில் வரவிருக்கும் தயாரிப்புக்கான பிரத்யேக மைக்ரோ சைட்  அமைக்கப்பட்டுள்ளது. புதிய JioBook ஆனது JioOS (Android அடிப்படையிலானது) மற்றும் ஆக்டா கோர் சிப்செட்டைக் கொண்டிருக்கும்.   டீஸர் படங்களில், மடிக்கணினியின் சில அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பிடத்தகுந்த வகையில் 4ஜி LTE சிம் கார்டு மூலம் வைபை கனெக்சனை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஜியோ மார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் அமேசான் தளங்களில் இந்த லேப்டாப்பை இன்று (ஆகஸ்ட் 5 ஆம் தேதி) முதல் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.