உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தங்களது பயனர்களுக்கு புதிய வசதி ஒன்றை வாட்ஸ் அப் கொண்டு வர உள்ளது. அதாவது மறையும் மெசேஜ்களில் இதுவரை 24 மணி நேரம், ஏழு நாள் மற்றும் 90 நாள் ஆகிய வசதிகள் மட்டுமே இருந்த நிலையில் மேலும் 15 ஆப்ஷன்களை சேர்க்க whatsapp திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஒரு மணி நேரத்தில் இருந்து ஒரு வருடம் வரை மறையும் மெசேஜ்களுக்கான செட்டிங்கை மாற்றலாம். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அனுப்பப்பட்ட மெசேஜ் தானாக அழியும். இந்த புதிய அம்சம் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.