தற்போது நெட்ஃப்ளிக்ஸ் கணக்கின் கடவுச் சொல் அதாவது பாஸ்வர்டை யாருடனும் பகிர்ந்துக்கொண்டால், உங்களை சிறை கம்பிகளுக்கு பின்னால் தள்ளக்கூடும். ஏனென்றால் அவ்வாறு செய்வது மோசடி வகையின் கீழ் வந்து விட்டது. ஆகவே இனி அப்படி செய்வது குற்றமாக கருதப்படும். இதற்காக சிறைத் தண்டனை (அ) கடுமையான அபராதம் செலுத்தவேண்டியிருக்கும்.

சென்ற சில வருடங்களாக  கடவுச் சொற்களைப் பகிரும் போக்கு மக்கள் மத்தியில் மிகவும் அதிகமாக இருக்கிறது. மக்கள் ஒரு கணக்கிற்கு குழு சேர்கிறார்கள் மற்றும் 4, 5 பேர் அந்த கணக்கில் இருந்து திரைப்படங்களை பார்க்கின்றனர். இனி அவ்வாறு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.