மிகவும் பிரபல ஸ்மார்ட்போனான ஐபோன் 14-ஐ மிக கம்மியான விலையில் வாங்க நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ஐபோன் 14க்கு பிளிப்கார்டில் மிகப்பெரிய தள்ளுபடியானது கிடைக்கிறது. வெளியீட்டு நிகழ்வுக்கு பிறகும், இந்த போனின் விலையானது மிகக் குறைவாக உள்ளதாக தெரிகிறது. பிளாக்ஷிப் போன்கள் பாதி விலைக்கும் குறைவாகவே கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

பிளிப்கார்டு 2022 iphoneல் ரூ.45,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. நீங்கள் சமீபத்திய ஐபோனை வாங்க விருப்பப்பட்டால் இன்று அதற்கு சரியான வாய்ப்பு வந்திருக்கிறது. ஐபோன் 14-ன் அறிமுக விலையானது ரூ.79,900 ஆகும். இருந்தாலும் பிளிப்கார்ட்டில் இந்த அசத்தலான போன் ரூபாய்.68,999க்கு கிடைக்கிறது. அதன்படி போனில் சுமார் 11 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்பின் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் இதில் கிடைக்கும். இதன் காரணமாக போனின் விலை மேலும் கணிசமாக குறையும்.