மேற்காசியப் பகுதிகளில் போர்ச் சூழல் நிலவி வருவதால், உலகெங்கும் எரிசக்தி தட்டுப்பாடு குறித்த அச்சம் எழுந்துள்ளது. இந்த நெருக்கடியான சூழலில், இந்தியா வளைகுடா நாடுகளை மட்டுமே நம்பி இருக்காமல், தனது எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவுடன் கைகோர்த்துள்ளது. இதன்படி, வரும் ஏப்ரல் மாதத் தேவைக்காக ரஷ்யாவிடமிருந்து 66,000 பேரல் கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்துள்ளது. இது இந்தியா தனது எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுத்த மிக முக்கியமான ராஜதந்திர நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
தற்போது இந்தியாவை நோக்கி கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (LPG) ஏற்றிய கப்பல்கள் வரத் தொடங்கியுள்ளதால், உள்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை அல்லது அவசரக்கால நெருக்கடி ஏற்படும் என்ற அச்சம் நீங்கியுள்ளது. மற்ற நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் திணறி வரும் வேளையில், இந்தியா ரஷ்யாவுடன் மேற்கொண்ட இந்த உடன்பாடு, நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளும், அத்தியாவசிய சேவைகளும் எவ்விதத் தடையுமின்றி தொடர்வதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
