டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “பதான்”. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதோடு பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இத்திரைப்படம் கடந்த ஜனவரி 25ம் தேதி இந்தியா முழுவதும் 8000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி ரிலீஸ் ஆன இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த திரைப்படம் ரூபாய்.1000 கோடி வசூல் செய்து உள்ளதாக அண்மையில் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் வசூல் சாதனையை  அடுத்து பதான் படக்குழுவானது அதிரடி முடிவெடுத்து உள்ளது. அதன்படி, இப்படத்தின் டிக்கெட் விலையை இன்று ஒருநாள் மட்டும் ரூ.110 ஆக படக்குழு குறைத்து உள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.