தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது மாமன்னன், சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா மற்றும் தசரா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் பிஸியா நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அதன் பிறகு அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கழுத்து நிறைய தங்க நகைகளை அணிந்திருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம்  நகைக்கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதாகும். மேலும் இந்த புகைப்படம்  தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.