எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ‘கர்சர்’ என்ற ஏஐ கோடிங் தளத்தை உருவாக்கிய ‘எனிஸ்பியர்’ நிறுவனத்தை 60 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. இந்த பிரம்மாண்ட ஒப்பந்தத்தின் மூலம், கர்சர் நிறுவனத்தின் நிறுவனர்களான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமன் சங்கர் (25) மற்றும் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட சுலே அசிஃப் (26) ஆகிய இருவரும் ஒரே நாளில் பில்லியனர்களாக மாறியுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனப் பங்குகள் கிடைக்கவுள்ளன. எம்ஐடியில்  படிக்கும்போது நண்பர்களான இவர்கள் இருவரும், மென்பொருள் உருவாக்குநர்களுக்கு உதவும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘கர்சர்’ தளத்தை உருவாக்கினர்.

அமன் சங்கர் மற்றும் சுலே அசிஃப் ஆகிய இருவருமே இளம் வயதிலேயே தொழில்நுட்ப உலகில் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளனர். அமன் சங்கர், ஐஐடி பம்பாய் முன்னாள் மாணவரின் மகன் ஆவார், அவர் தனது 14 வயதிலேயே கோடிங் கற்கத் தொடங்கி, கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

மறுபுறம், கராச்சியில் பிறந்த சுலே அசிஃப் ஒரு கணித மேதை; அவர் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களை வென்றவர்.

என்விடியா, அடோப், ஊபர் எனப் பல முன்னணி நிறுவனங்கள் பயன்படுத்தும் கர்சர் தளம், ஏஐ மூலம் மென்பொருள் குறியீடுகளை எளிதாக எழுத உதவுகிறது. இந்த சாதனை, இளம் தொழில்நுட்பவியலாளர்கள் உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.