தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அதன் பிறகு நடிகர் விஜய் தற்போது வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நிலையில் தற்போதைய சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் கருத்து மோதல் நிலவுகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போதைய சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்றும் அதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட ஒரு மேடையில் கூறியுள்ளார் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு அந்த காலத்தில் எம்ஜிஆர் சூப்பர் ஸ்டாராக இருந்தார். இவரைத் தொடர்ந்து ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார். இந்நிலையில் தற்போது விஜய் தான் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இதுதான் நிதர்சனமான உண்மை என்று கூறியுள்ளார். இதற்காக ரசிகர்கள் மோதிக்கொள்வது சரி கிடையாது. மேலும் நடிகர் விஜயின் வெற்றியை அனைவரும் கொண்டாட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.