உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், மணமகன் வீட்டாரால் கொண்டு வரப்பட்ட மேக்கப் பொருட்கள் குறைவாக இருந்ததால், மணப்பெண் திருமணத்தை நிறுத்திக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த திருமணத்தின் போது, மேக்கப் பொருட்கள் பிடிக்காததால் ஆத்திரமடைந்த மணப்பெண், திடீரென திருமணத்தை ரத்து செய்தார்.

​இதனால் இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மண்டபமே போர்க்களமாக மாறியது. ஒருவரை ஒருவர் கற்களை வீசித் தாக்கியதில் மணமகனின் கார் பலத்த சேதமடைந்ததுடன், அவரது சகோதரரும் தாக்கப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் சிலரைக் கைது செய்தனர். இறுதியில், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, திருமண செலவுகளை மாப்பிள்ளை வீட்டார் தருவதாக ஒப்புக்கொண்டதை அடுத்து, மணப்பெண் இல்லாமல் பராத் ஊர்வலம் சோகமாகத் திரும்பியது.