மக்களின் பாதுகாப்பிற்காக இரவும் பகலும் உழைக்கும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாததால், அவர்களுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஆளாகி, அடுத்தடுத்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் அதிர்ச்சிச் சம்பவங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளன.
அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 135 ஊர்க்காவல் படை வீரர்களின் வாழ்வாதாரம் தற்சமயம் முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது. குடும்பச் செலவுகள், பிள்ளைகளின் கல்விக்கட்டணம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்குக் கூடப்பணமில்லாமல் வட்டிக்குக் கடன் வாங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடுமையின் உச்சமாக, கடந்த 10 நாட்களில் மட்டும் இரண்டு பெண் காவலர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனை வளாகத்திலேயே தங்களது குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த ஜூலை 8-ஆம் தேதி, அலாவுதீன் மஹாலி என்ற பெண் காவலர், சம்பளம் கிடைக்காததால் தனது குடும்பம் பட்டினியால் வாடுவதையும், நோய்வாய்ப்பட்ட தாய்க்கு மருந்து வாங்கப் பணமில்லாததையும் நினைத்து மனமுடைந்து, டூட்டியின் போதே மருத்துவமனை வளாகத்தில் இருந்த பினாயிலைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
சக ஊழியர்கள் அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்ததால் அவர் உயிர் தப்பினார். இந்தச் சோகம் மறைவதற்குள், சனிக்கிழமை காலை புல்குமாரி ஹெம்ப்ராம் என்ற மற்றொரு பெண் காவலர், தனக்கு கடுமையான வயிற்று வலிக்குக் கூட மருந்து வாங்கப் பணம் இல்லை என்று மருத்துவமனை வளாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார். “எனக்குக் காசு கொடுங்கள், இல்லையென்றால் நான் செத்துவிடுவேன்” என்று அவர் கதறியது அங்கிருந்தவர்களைக் கலங்க வைத்தது.
இந்த விபரீத சம்பவங்களைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர், பாதிக்கப்பட்ட பெண்காவலரை நேரில் சந்தித்து தனது சொந்தப் பணத்திலிருந்து உடனடி நிதியுதவி வழங்கினார். சம்பளத் தாமதம் குறித்துப் பேசிய அவர், பாதுகாப்புப் படை வீரர்களின் ஊதியப் பாக்கியை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட துறைக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, தலைமை அலுவலகத்திலிருந்து பட்ஜெட் ஒதுக்கீடு இன்னும் வராததே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என்றும் விளக்கமளித்துள்ளார்.
खाकी वर्दी के पीछे जो महिला है वो तनख्वाह न मिलने के दर्द में है । एमजीएम अस्पताल में एक महिला होमगार्ड का फफक-फफक कर रोना व्यवस्था की असंवेदनशीलता को उजागर करता है। पांच महीने से वेतन का इंतजार, ऊपर से गंभीर बीमारी का बोझ—यह कैसी परीक्षा है? क्या उसकी मेहनत का मोल केवल खामोशी और… pic.twitter.com/fHbPSaZCcn
— mukesh kumar (@Mukesh_Ranchi) July 18, 2026
“>
நிதி கிடைத்தவுடனேயே முன்னுரிமை அடிப்படையில் 135 வீரர்களின் 4 மாதச் சம்பளமும் 100% முழுமையாக வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அரசு நிர்வாகத்தின் இந்த மெத்தனப் போக்கு தற்சமயம் சமூகவலைதளங்களில் கடுமையான விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
