பிரபல ஹாலிவுட் நடிகர் கார்ல் வெதர்ஸ் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1976ஆம் ஆண்டு வெளிவந்த ‘ராக்கி’ திரைப்படத்தில் அப்போல்லோ க்ரீட் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து உலக புகழ் பெற்றார். இப்படத்தின் ஹீரோ ராக்கியுடன் இவர் சண்டையிடும் காட்சிகள் இன்றளவும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது மறைவுக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.