தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு காமராஜரை போல் சித்தரித்து மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ரஜினியின் டிசம்பர் 12ஆம் தேதி நாளை தன்னுடைய 73 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

ரஜினியின் பிறந்தநாளை கொண்டாட அவரது ரசிகர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் வித்தியாசமான போஸ்டர்கள் மற்றும் பேனருக்கு பேர் போன மதுரையில் ரஜினிகாந்தை காமராஜர் போல் சித்தரித்து பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் கிங் மேக்கரே என ரஜினியை குறிப்பிட்டுள்ள நிலையில் தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.