தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 30 லட்சம் மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் 6000 ரூபாய் உதவி தொகையுடன் கூடுதலாக 3000 ரூபாய் பெற உள்ளனர். அதாவது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் நிலையில் இந்த மாதத்திற்கான தொகை ஆயிரம் ரூபாய் முன்கூட்டியே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அதனைப் போலவே அடுத்த மாதம் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை ஒட்டி மாதத்தின் முதல் வாரத்திலேயே ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாகவும் பொங்கல் பரிசாக அரிசி மற்றும் வெள்ளத்திற்கு பதிலாக ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அடுத்தடுத்த குடும்ப தலைவிகளுக்கு கூடுதலாக 3000 ரூபாய் வழங்கப்பட உள்ள நிலையில் மொத்தமாக அரசு சார்பாக 900 ரூபாய் கிடைக்கும்.