சாலையில் விதிகளை மீறுபவர்களுக்கு ஒரு ஆல்டோ கார் ஓட்டுநர் பாடம் புகட்டும் இந்த சுவாரசியமான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. பரபரப்பான ஒரு சாலையில், டிரக் ஒன்று தவறான பாதையில் (Wrong Side) அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. வழக்கமாக இதுபோன்ற சமயங்களில் மற்ற வாகனங்கள் பயந்து ஒதுங்கிச் செல்லும். ஆனால், இந்த ஆல்டோ கார் ஓட்டுநர் அந்த டிரக்கிற்கு வழிவிடாமல், தனது பாதையிலேயே உறுதியாக நின்று அதனைத் தடுத்து நிறுத்தினார்.

​டிரக் ஓட்டுநர் எவ்வளவு முயன்றும் அந்த ஆல்டோ கார் நகரவில்லை. இறுதியில், வேறு வழியின்றி அந்தப் பிரம்மாண்டமான டிரக்கை ஓட்டுநர் பின்னோக்கி (Reverse) எடுத்துச் சென்றார். “விதிமுறைகள் என்பது அனைவருக்கும் பொதுவானது” என்பதை அந்த ஆல்டோ கார் ஓட்டுநர் துணிச்சலுடன் உணர்த்திய விதம் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ‘பெரிய வண்டி’ என்று பயப்படாமல் சட்டப்படிச் செயல்பட்ட அந்த ஓட்டுநரின் செயல், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.