ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த தேஜா என்பவர் காரில் ராமேஸ்வரம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொம்மாடிமலை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த சுதர்சன்(23), முத்துக்கருப்பன்(38), சந்துரு(30) ஆகிய மூன்று பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.