மதுரை மாவட்டத்திலுள்ள தோடனேரி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமகிருஷ்ணன்(65) என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ராமகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்றார்.

இந்நிலையில் தனியார் நிறுவனம் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ராமகிருஷ்ணன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.