மோடியின் தமிழக வருகை குறித்தும் பாஜக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்தும் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, ஒரு காலத்தில் தமிழகத்தின் பக்கமே வராத மோடி இப்போது அடிக்கடி வந்து செல்கின்றார். அவர் இங்கே பாய் போட்டு படுத்தாலும் பாஜகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது. தமிழகத்தில் திமுக கூட்டணி கம்பீரமாக உள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கோவிலில் உடைக்கும் சிதறு தேங்காய் போல் உள்ளது என்று விமர்சித்துள்ளார்.