கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாத்தலங்களில் போலி குளிர்பானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சீசனுக்கு ஏற்றது போல மாம்பழம் மற்றும் வாழைப்பழங்களில் கல் வைத்து பழுக்க வைப்பதையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்பூசணி பழங்கள் சிவப்பாக இருக்க ரசாயனம் கலந்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.