மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் Zee News மற்றும் Matrize நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் பாஜக 3வது முறையாக வென்று ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 390 இடங்களை கைப்பற்றும் என்றும், இந்தியா கூட்டணி வெறும் 96 இடங்களை கைப்பற்றும் ,தமிழ்நாட்டை  பொறுத்தவரை திமுக கூட்டணி 36, அதிமுக 2, பாஜக 1 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.