தமிழ்நாட்டில் 2 வாரங்களுக்கு முன் ரூ.500க்கு விற்பனையான பூண்டின் விலை மளமளவென்று குறையத் தொடங்கியுள்ளது. நேற்று ரூ.250க்கு விற்பனையான ஒரு கிலோ பூண்டு, இன்று ரூ. 100 குறைந்து ரூ.150க்கு விற்பனையாகிறது. அதேபோல், வரத்து அதிகரித்ததால், பீன்ஸ், முருங்கைக்காய், வெண்டைக்காய், சின்ன வெங்காயம், தக்காளி, கேரட் போன்ற காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது