சென்னை மாவட்டம் மணப்பாக்கம் பாலத்தின் அருகில் ஒரு காலி இடத்தில் சந்தேகப்படும்படியாக மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை விசாரித்த போது அவர்களின் பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. எனவே மூன்று பேரையும் சோதனை செய்து பார்த்தபோது அவர்களிடம் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து மூவரிடமும் விசாரணை நடத்திய போது அவர்கள் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பிரசாந்த்(24), சஞ்சய்(20) மற்றும் யோகேச்ஜ்(23) என்பது தெரியவந்தது.
பின்னர் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த போன், கார் உள்ளிட்டவற்தை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுக்கு போதை பொருளை வழங்கியது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
